நியூசிலாந்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட அணுக்கமான பொருளியல் பங் காளித்துவ உடன்பாடு இரு நாடு களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை முதல் அமலாகிறது.
சிங்கப்பூரின் முதலாவதுமான தும் நியூசிலாந்தின் இரண்டாவது மான தடையற்ற வர்த்தக உடன் பாடு 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி நடப்புக்கு வந் தது.
அதனுடன் இப்போது மின் வர்த்தகமும் ஒழுங்குமுறை ஒத்து ழைப்பும் சேர்த்துக்கொள்ளப்பட்டு உள்ளன என்று வர்த்தக தொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது.
புதிய மேம்படுத்தப்பட்ட உடன்பாடு நவீன வர்த்தக விவகாரங் களுக்குத் தீர்வு கண்டு, வர்த்தக வழிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு மேலும் வலுசேர்க் கும்.
“நியூசிலாந்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மேம் படுத்தப்பட்ட அணுக்கமான பொரு ளியல் பங்காளித்துவ உடன்பாட் டுக்கு விரைவாக ஒப்புதல்
அளித்து, அதை அமல்படுத்தியது இரு நாடுகளும் வெளிபு படையான, விதிமுறைக்கு உட்பட்ட வர்த்தக முறைக்கு எங்களது வலுவான கடப்பாட்டைப் பிரதி பலிக்கிறது,” என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தெரிவித்தார்.
“இந்த மேம்படுத்தப்பட்ட உடன் பாடு, வர்த்தக இடையூறுகளை மேலும் குறைத்து, ஒழுங்குமுறை ஒத்துழைப்பையும் மின் வர்த்தக முயற்சிகளையும் வலுப்படுத்தி, இரு நாட்டு வர்த்தகங்களுக்கு பல நன் மைகளைக் கொண்டு வரும்.
“இரு நாடுகளின் பொருளியல் உறவுகளை இந்த உடன்பாடு மேலும் வலுப்படுத்தும் என எதிர் பார்க்கிறேன்,” என்றும் அமைச்சர் சான் சொன்னார்.
நியூசிலாந்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வலுவான வர்த் தக மற்றும் முதலீட்டு உறவுகள் உள்ளன என்று வர்த்தக தொழில் அமைச்சு கூறியது. 2018ஆம் ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 12.1% அதி கரித்து, $4.1 பில்லியனைத் தொட்டது.
சிங்கப்பூர் நியூசிலாந்தின் ஆறா வது ஆகப் பெரிய முதலீட்டாளர். அதன் முதலீடு 2017ஆம் ஆண்டு இறுதி வரை $3.9 பில்லியனை எட் டியது என்று நியூசிலாந்தின் புள்ளிவிவர அமைப்பு கூறியது.