தங்களுக்குப் போதுவான ஓய்வு நாட்களையும் கூடுதல் பணிநேர ஊதியத்தையும் கொடுக்கவில்லை என்ற காரணத்தால், பொதுப் போக்குவரத்து நடத்துநரான எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் மீது மேலும் மூன்று பேருந்து ஓட்டு நர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அவர்கள் மூவரும் மலேசியர்கள்.
இதேபோன்ற வழக்கை இவ் வாண்டு செப்டம்பர் மாதத்தில் ஐந்து ஓட்டுநர்கள் தொடுத்தி ருந்தனர். இவர்கள் எட்டு பேர் சார் பாக வாதாடுபவர் ‘கார்சல் லா சேம்பர்ஸ்’ நிறுவனத்தின் வழக் கறிஞர் திரு எம். ரவி.
கூடுதல் பணிநேரத்துக்கு ஏற்ற ஊதியத்துக்குக் குறைவாக தொகை கொடுப்பட்டது என்றும் ஒரு வாரத்துக்கு மேற்பட்டு வேலை செய்தும் ஒய்வு நாள் கொடுக்கப் படவில்லை என்றும் அந்த எட்டு பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்த னர்.
முன்னதாக வழக்கு தொடுத்த ஐந்து பேரில் மூவர் சிங்கப்பூரர்கள் இருவர் மலேசியர்கள் எனத் தெரி கிறது.
ஓய்வு நாள் கொடுக்கப்படாமல் தொடர்ந்து 12 நாட்கள் வேலை செய்தனர் என்றும் தங்கள் நியம
னக் கடிதங்களில் குறிப்பிடப்பட்ட தற்குப் புறம்பாக இது உள்ளது என்றும் ஓட்டுநர்கள் கூறினர்.
“எங்கள் பேருந்து ஓட்டுநர் மூவர், ஓய்வு நாட்கள், வேலை நேரம், கூடுதல் வேலை நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு வழக் கறிஞர் எம். ரவி மூலம் எங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர்,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் தொடர்புப் பிரிவின் மூத்த உதவித் தலைவர் டேமி டான் கூறினார்.
முன்னதாக வழக்கு தொடுத்தி ருந்த ஐந்து பேருந்து ஓட்டுநர் களும் சமரசம் மூலம் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒப் புக்கொண்டுள்ளதாகவும் அந்தச் சமரச தீர்வு கலந்துரையாடல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறியப்படுகிறது.