‘ஸ்டார்ஹப்’, மலேசியாவின் ‘யு மொபைல்’ இணைந்து 5ஜி சோதனைத் திட்டம்

சிங்கப்பூரின் ‘ஸ்டார்ஹப்’ தொலைத்தொடர்பு நிறுவனமும் மலேசியாவின் ‘யு மொபைல்’ இணைந்து ஐந்தாம் தலைமுறைத் (5G) தொலைத்தொடர்புக் கட்டமைப்பை அடுத்து ஆண்டு முதலாம் காலாண்டில் சோதித்துப் பார்க்கவிருக்கிறது என்று அவ்விரு அமைப்புகளும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

அந்தச் சோதனைத் திட்டம் ‘ஹுவாவெய்’ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நான்காம் தலைமுறை தொலைத்தொடர்பின் உள்கட்டமைப்பின் துணையுடன் தனித்து நடத்தப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எல்லை தாண்டிய ‘ஹோலோகிராஃபிக்’ அழைப்புகளும் பல தரப்புகள் பங்குகொள்ளும் காணொளி அழைப்புகளும் சோதித்துப் பார்க்கப்படும்.

இரண்டு நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக விலைக் குறையீட்டை இரு அமைப்புகளும் ஆராய்ந்து முடிவெடுக்கும்.

“5G வெளிநாட்டுத் தொலைத்தொடர்பு சோதனையை நமது அண்டை நாடான மலேசியாவில் தொடங்குவதுதான் சிறந்தது என்று முடிவெடுத்தோம். எங்கள் வாடிக்கையாளர் கள் அதிகம் செல்லும் நாடு மலேசியாதான்,” என்றார் ஸ்டார்ஹப்பின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி சோங் சியூ லூங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!