வெளிநாட்டு ஊழியர்களுக்கு வசதியாக அவர்கள் தங்கும் விடுதிகளில் மலிவுச் சந்தைகளை ‘பாராங் ஃபார் யோர் பக்’ சமூக நிறுவனம் நடத்தியது.
அங்கு புதிய, பயன்படுத்தப்பட்ட ஆடைகள், காலணிகள், பைகள், மின்னியல் பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் சிங்கப்பூரர்கள் விற்பனை செய்தனர்.
ஆக அண்மைய மலிவுச் சந்தை நேற்று முன்தினம் சாங்கி ஈஸ்ட்டில் உள்ள ‘டி வால்’ விடுதியில் நடத்தப்பட்டது.
அங்குள்ள 10 கடைகளில் ஏறத்தாழ 1,200 ஊழியர்கள் பொருட்களை வாங்கினர்.