ஹெங்: பொருளியல், உலகச்சூழல் விவகாரங்களில் அரசாங்கம் கவனம்

பொருளியல் சரிவு, நிச்சயமற்ற உலக நிலவரம் போன்றவற்றைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) தெரிவித்துள்ளார்.

உலகச் சூழலில் நிச்சயமற்ற போக்கு அதிகரிப்பதையும் பொருளியல் மெதுவடைவதையும் பற்றி சிங்கப்பூரர்கள் கவலைப்படுவதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரர்கள் சிறப்பான வாழ்வைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவும் அவற்றில் முதலீடு செய்யவும் கடப்பாடு கொண்டிருக்கும் அரசாங்கம், ஒருவரும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் செயல் கட்சி (மசெக) விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.

அக்கட்சியின் முதலாம் உதவி தலைமைச் செயலாளராகவும் நிதி அமைச்சராகவும் உள்ள ஹெங் வரும் பிப்ரவரி மாதம் வரவு செலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

குடும்பங்களுக்கான ஆதரவு, மூத்தோருக்கானப் பராமரிப்பு ஆகியவற்றுடன் ஊழியர்கள் புதிய திறன்களைப் பெற உதவிக்கரம் நீட்டுவது, உருமாற்றம் பெரும் வர்த்தகங்களுக்கான ஆதரவை அதிகரிப்பது போன்றவற்றில் வரும் ஆண்டில் அரசாங்கம் ஈடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்களுக்கான ஆண்டிறுதி செய்தியை மக்கள் செயல் கட்சி சார்பில் திரு ஹெங் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

அக்கட்சியின் நான்காம் தலைமுறையினருக்கான தலைவராகவும் வருங்காலப் பிரதமராகவும் அவர் கணிக்கப்படுகிறார்.

மசெக புத்தாண்டுச் செய்தியை அக்கட்சியின் தலைமைச் செயலாளராக இருக்கும் பிரதமர் லீ சியன் லூங் வெளியிடுவது வழக்கம்.

நியாயமான, நேர்மையுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதே மசெகவின் குறிக்கோள் என்று தெரிவித்த திரு ஹெங், முன்னேற்றத்தால் விளையும் பலன்களை அத்தனை பேருக்கும் பரவலாக்குவதே அதன் பொருள் என்றார்.

தலைமுறை தலைமுறையாக மசெகவில் தலைமைப் பொறுப்புகளிலும் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள் நம்பிக்கை, கருணை, ஒருமைப்பாடு, தனிச்சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணியாற்றியதாகவும் துணைப் பிரதமர் கூறினார்.

“சிங்கப்பூரர்களுக்கு எது தேவை, எது சரி என்பதை சிங்கப்பூரர்களாகிய நாம் எப்போதுமே கவனம் செலுத்தி அதனடிப்படையில் செயல்பட்டு வந்துள்ளோம்.

“நான்காம் தலைமுறைத் தலைமைத்துவமும் அதனைத் தொடரும்.

“சிங்கப்பூரர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் மதித்து தொடர்ந்து வெல்வோம். அதற்கு நம் எல்லாரின் நல்லிதயமும் உறுதிப்பாடும் துணைநிற்கும்,” என்றார் அவர்.

கடந்து சென்றிருக்கும் ஆண்டில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களையும் திரு ஹெங் நினைவு கூர்ந்தார்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் அரசியல் பிளவு, சமூக அமைதியின்மை ஆகியவற்றோடு இனம், சமயம், வகுப்பு அல்லது தலைமுறை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது போன்றவற்றைக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற பிரிவினைகள் மக்களையும் சமூகத்தையும் துன்புறுத்துவதோடு அவர்களிடத்தில் அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் என்றார்.

சமூகத்தைப் பிளவுபடுத்தும் வேற்றுமைகளை சிங்கப்பூர் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்திய திரு ஹெங், மாறாக பன்முகத்தன்மையை வலிமைமிக்க ஒன்றாகப் போற்ற வேண்டும் என்றார்.

நாட்டின் எதிர்காலத்தையும் கொள்கைகளையும் வகுக்க சிங்கப்பூரர்களுடன் அதிக நெருக்கமாக இணைந்து பணியாற்றும் வகையில் கடந்த ஜூன் மாதம் தாம் அறிவித்த ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’ இயக்கம் நல்ல பலனைத் தந்து வருவதாக துணைப் பிரதமர் ஹெங் மகிழ்ச்சியுடன் குறிப்பிட் டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!