ரயிலில் பயணம் செய்த பெண்ணை ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக கல்வி நிலையத்தின் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.
ஷோஹெய் யாமாமோட்டோ, 33, எனப்படும் அந்த ஆடவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி காலை 9.40 மணிவாக்கில் பொத்தோங் பாசிர் நிலையத்தில் ரயில் ஏறிய அவர், பெண் பயணி ஒருவரின் அருகில் சென்றார். பின்னர் தமது கைப்பெட்டி மேல் கைபேசியை வைத்து பெண்ணின் உள்பாவாடைக்குள் காணொளி படத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டு இருந்தார்.
டோபி காட் நிலையத்தை ரயில் நெருங்கியபோது ஏதோ தமது காலில் உரசுவதை அறிந்த பெண், கைபேசியைக் கண்டு அதிர்ந்தார். நிலையத்தில் ரயில் கதவுகள் திறந்தபோது அந்தப் பெண்ணின் பிடியிலிருந்து யாமாமோட்டோ தப்பினார். எம்ஆர்டி நிலையத்தில் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரை போலிசர் தேடிப்பிடித்து கைது செய்தனர்.
யாமாமோட்டோவுக்கு நேற்று முன்தினம் 24 நாள் சிறை, $15,000 அபராதம் ஆகியன விதிக்கப்பட்டன.