வரி திருப்பித் தரப்படுவதற்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள் என்ற தகவலைத் தாங்கிய மின்னஞ்சல் படத்துடன் வாட்ஸ்அப் பில் பரவி வரும் தகவலை நம்ப வேண்டாம் என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
‘சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் இணையம் வழி வரி திருப்பி அளிப்புக்கான உறுதி’ என்னும் தலைப்புடன் பகிரப்பட்டு வரும் தகவலை ஒதுக்குமாறு ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்ட மோசடி தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த மின்னஞ்சலைப் பெறுபவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பிப் பகிர வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டு உள்ளது.
ஆணையத்தின் முத்திரை யுடன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் அந்த மோசடித் தகவலில் ‘வரி திருப்பி அளிப்பின் மூலம் “236.51 $” பெறுவீர்கள்’ என்ற தகவல் அடங்கி உள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோல ஒரு தகவல் பரப்பப்பட்டது.