புத்தாண்டு தினத்தன்று புக்கிட் மேராவில் நிகழ்ந்த போதைப் பொருள் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருளை உட்கொண்ட தற்காக 52 வயது மாதும் பொதுச் சேவை அதிகாரி தமது கடமையை ஆற்றுவதிலிருந்து முரட்டுத்தனமாகத் தடுத்ததற் காக 55 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
புத்தாண்டு தினத்தில் புக்கிட் மேரா, புளோக் 3ல் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு மாலை 6.32 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் இது குறித்து புலனாய்வு நடைபெற் றுக்கொண்டிருக்கிறது என்றும் போலிஸ் கூறியது.
இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி மீட்புக் குழுவுக்கு (டார்ட்) அன்று இரவு 9 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர்களில் ஒருவர் அந்தப் புளோக்கின் 11வது மாடியிலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினார் என்று அறியப்படுகிறது.
அந்தப் பகுதியில் தனது குடும்பத்துடன் இரவு உணவு உண்டு கொண்டிருந்த நிகழ்ச்சிகள் நிர்வாகியான 51 வயது பெர்வின் லோ, அங்கு டார்ட் வாகனம், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், மூன்று போலிஸ் வாகனங்கள், ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவற்றைப் பார்த்ததாகக் கூறினார்.