வேலை செய்வதற்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர் களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வெளிநாடுகளில் பிறக்கும் சிங்கப்பூர் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று ஆகக் கடைசி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் சிங்கப்பூர் பெற்றோர் களுக்குப் பிறந்த 1,576 குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. அது 2008ஆம் ஆண்டு
டன் ஒப்புநோக்க 339 குழந்தைகள் அதிகம்.
ஆண்டுக்கு ஆண்டு அதி கமான சிங்கப்பூரர்கள் வேலை காரணமாகவோ, படிக்கவோ வெளிநாடுகளுக்குச் செல்கின் றனர். ஆனால் அவர்கள் தங்கள் சிங்கப்பூர் கடப்பிதழை வைத்துக் கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதக் கணக்குப்படி, 217,000 சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை பத்து ஆண்டுகளுக்கு முன் 180,700 ஆக இருந்தது. 2014ல் இது 212,200 ஆக இருந்தது.