கடன் மோசடி தொடர்பிலான 1,700 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை $6.8 மில்லியன் பணத்தை இழந்துள்ளார்கள்.
இந்த அளவு 2018ஆம் ஆண்டு முழுமைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகையைக் காட்டிலும் மூன்று மடங்குக்கு மேல் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆண்டில் மொத்தம் 990 மோசடி சம்பவங்களில் $2 மில்லியன் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்கள் இழந்தார்கள்.
கடன் மோசடி தொடர்பில் போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக் கையில், இந்தச் சம்பவங்கள் உரிமமில்லா கடன் கொடுப்போர் சம்பந் தப்பட்டவையாக இருக்கலாம் என் றும் கூறியது.
பொதுவாக மோசடி நபர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் கடன் சேவை வழங்கு கிறோம் என்று குறுஞ்செய்தி அல் லது வாட்ஸ்அப் செய்தி அனுப்பப் படும்.
செய்தியை அனுப்புபவர் தான் உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர் என்றும் கூறிக்கொள்வார்.
அவ்வாறு அவர்களின் ஏமாற்று வலையில் சிக்கிக்கொள்வோர், கடன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் ஒரு தொகையை வைப்புத்தொகையாக அனுப்பி வைக்குபடி கேட்டுக்கொள்ளப் படு வார்கள்.
இருப்பினும், பணம் மாற்றி விடப்பட்ட பிறகு, கடன்தொகை கொடுக்கப்படாது. கடன் கொடுப்பதாக அழைத்தவரின் தொடர்பு எண்ணுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைத்தால், தங்களுக்குக் கிடைத்த குறுஞ்செய்தி உரிமம் பெற்ற கடன் கொடுக்கும் நிறுவனத்திடமிருந்து வந்ததில்லை என்றும் அழைத்தவருக்குத் தொடர்பு கிடைக்காமல் இருக்கும் நிலை ஏற்படும் என்றும் போலிஸ் விளக்கி யது.
மற்றொரு விதமான மோசடியில், ஏமாற்றும் நபர்கள் சட்ட அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் போன்ற அரசாங்க அமைப்புகள் கொடுத்த அங்கீகார கடிதம் போன்ற போலி ஆவணங்களை அனுப்பிவைப்பார்கள்.
இந்த ஆணவங்களில், கடன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படு வதற்கு முன் அவர்கள் முன்பண மும் ஏழு விழுக்காடு ஜிஎஸ்டி வரி யும் செலுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
“அங்கீகாரம் பெற்ற கடன் கொடுக்கும் நிறுவனத்திடமிருந்து தான் அவர்கள் கடன் பெறுகிறார்கள் என்று அவர்களை நம்ப வைக்கும் உத்திதான் இது,” என்றும் போலிஸ் விளக்கியது.
கடன் கொடுப்பதாகக் கூறும் யாருக்கும் தங்கள் அடையாள அட்டை எண், சிங்பாஸ் மறைச் சொல், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கொடுக்க வேண்