தைவான் வான்குடை விபத்து: வீரருக்கு 2வது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

தைவானில் நடைபெற்ற சிங்கப்பூர் ஆயுதப்படையின் வான்குடை பயிற்சியில் காயமுற்ற முழு நேர தேசிய சேவையாளருக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

அந்த விபத்தில் 21 வயது பிரை வேட் ஜோஷுவா குவேக் ஷோ ஜிக்கு முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது.

முதல் அறுவை சிகிச்சை டிசம்பர் மாதம் 19ஆம் தேதியும் முதுகுத் தண்டு எலும்பை சீர்ப்படுத்தும் இரண்டாவது அறுவை சிகிச்சை டிசம்பர் 21ஆம் தேதியும் எவ்வித சிக்கலும் இன்றி நடைபெற்றன என்று கூறப்பட்டது.

டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தைவானில் நடைபெற்ற வான்குடை பயிற்சியின்போது பிரைவேட் குவேக்குக்குக் காயம் ஏற்பட்டது.

அந்தக் காயத்தால் அவரது உடலின் மேற்பாகங்களும் கீழ் பாகங்களும் வலு இல்லாமல்

போயின என்றும் அமைச்சு குறிப் பிட்டது.

“இரண்டாவது அறுவை சிகிச் சைக்குப் பின், அவரது அசைவு களில் சற்று முன்னேற்றம் தென் பட்டது. பிரைவேட் குவேக்குக்கு தொடர்ந்து நீண்டகால மறுவாழ்வு, இயன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்,” என்றும் அறிக்கை கூறியது.

பிரைவேட் குவேக்கைப் பார்க்க அவரது குடும்பத்தினர் தைவா னுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் குவேக் தற்போது சுவாசக் கருவியின் உதவியில்லாமல் மூச்சு விடுகிறார் என்றும் சுயநினைவு டன் அவர் தம் குடும்பத்தாருடன் விழிப்புநிலையில் உரையாடுவதாக வும் தற்காப்பு அமைச்சு சொன்னது.

தலைமை மின்னற்படை அதி காரி கர்னல் கென்னி டே, தைவான் மருத்துவமனையில் குவேக்கைச் சந்தித்து அவருடனும் அவ

ரது குடும்பத்தாருடனும் பேசியுள்ளார்.

பிரைவேட் குவேக் எந்த ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. சிங்கப்பூர் ஆயுதப் படை மின்னற்படைப் பிரிவுதான் வான்குடை பயிற்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!