ஓங்: மாணவர்களின் திறன் முழுமையாக வெளிப்படும்

சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் முழுமையான திறன்களை வெளி்க்கொணரும் முக்கியமான, மிகவும் உத்திபூர்வமான திட்டம் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

முமுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டத்தை இவ்வாண்டு அமல்படுத்தும் 28 பள்ளிகளில் ஒன்றான சாய் சீயில் உள்ள பிங் யி உயர் நிலைப் பள்ளிக்கு கல்வி அமைச்சர் நேற்று வருகையளித்தார்.

இந்தத் திட்டத்தைச் சோதித்துப் பார்க்கும் பள்ளிகளில் இந்த ஆண்டு உயர்நிலை ஒன்றில் பல்வேறு தர நிலைகளில் உள்ள மாணவர்கள் ஒரே வகுப்பில் பயில்வார்கள்.

இந்த மாணவர்கள், கலை, நற்குணமும் குடியியல் கல்வியும், வடிவமைப்பும் தொழில்நுட்பமும், உடலியல் கல்வி என பொதுவான பாடங்களைக் கற்பார்கள். அதற்கு அவர்கள் மொத்த பள்ளி நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வார்கள்.

விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) என முன்பிருந்த தரநிலைகளிலிருந்து இந்தப் புதிய முறை மாறுபட்டுள்ளது.

பிங் யி உயர்நிலைப் பள்ளியில் நான்கு உயர்நிலை ஒன்று வகுப்பு கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தரநிலைகளில் இருந்து 30 முதல் 35 மாணவர்கள் பயில்வார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் ஓங், “ஒவ் வொரு வகுப்பும் வெவ்வேறு தர நிலைகள், வெவ்வேறு இனப் பிரிவு கள், வெவ்வேறு பின்புலன்கள், சிறப்புத் தேவை மாணவர்கள் ஆகி யோரை உள்ளடக்கும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

“நீங்கள் நன்றாகப் படிக்கும் மாணவராக இருந்தால், நீங்கள் வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட மாணவர்களுடன் பயி லும் அரிய வாய்ப்பைப் பெறுவீர் கள்.

“உங்களுடன் சேர்ந்து உங்கள் சக மாணவர்களும் சிறந்து விளங்க நீங்கள் அவர்களுக்குப் பாடங்க ளில் உதவலாம். அதேவேளையில், விளையாட்டுகள், பண்புநெறிகள், மற்ற பாடங்களில் சிறந்து விளங் கும் அவர்கள் உங்களுக்கு அவை குறித்து உதவியைச் செய்வார்கள்.

“கல்வி முறையில் செய்யப்பட் டுள்ள இத்தகைய மாற்றங்கள், மாணவர்கள் பாடங்களில் மட்டும் சிறக்க வேண்டும் என்று கொண்டு உள்ள மனப்போக்கிலிருந்து மாறி, மற்ற மாணவர்களுடன் இணைந்து தாம் முன்னேறி அவர்களையும் முன்னேற்றிவிடும் அற்புதச் சாதனையைச் செய்து முடிப்பார்கள்.

“இந்த அரிய அனுபவத்தைத் தன்னகத்தே கொண்டு மாணவர்கள் உயர்நிலைக்குப் பிந்திய கல் விக்கு உறுதியுடன் முன்னேறிச் செல்வார்கள்,” என்றும் விவரித்தார்.

வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) பிரிவின் உயர்நிலை இரண்டாம் ஆண்டு மாணவியான ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா, நான்கு பாடங்களை விரைவுநிலை வகுப்புகளில் படித்து வருகிறார்.

கணிதம், அறிவியல், புவியியல், தமிழ் மொழி ஆகிய பாடங்களை விரைவுநிலையில் எடுப்பதனால் பல்வேறு விதங்களில் பயனடைந்ததாகக் கூறினார்.

“தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் தமிழ் பாடத்தில் ‘ஏ’ மதிப்பெண்ணைப் பெற்றதால் உயர்நிலை ஒன்றிலேயே தமிழ் பாடத்தை விரைவுநிலைப் பிரிவில் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.

“வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) பிரிவைச் சேர்ந்திருந்தாலும் விரைவு நிலைப்பிரிவில் இந்தப் பாடங்களை எடுப்பதில் எனக்கு பயம் இருந்ததில்லை.

“இந்தப் பாடங்களைக் கடினமான பிரிவுகளில் எடுத்துப் படிப்பதால் ஒருவர் அந்தப் பாடத்தை ஆழமாகக் கற்றுக்கொண்டு தமது திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

“அத்துடன், ஆசிரியர்களின் உதவியும் சக மாணவர்களின் ஊக்குவிப்பும் என்னை சிரமமான கட்டங்களில் பாடங்களை செவ்வனே செய்யத் தூண்டின,” என்றார் 14 வயது ஜாஃப்ரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!