வீவக மறுவிற்பனை, தனியார் வீட்டு விலைகள் உயர்ந்தன

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை அடுக்குமாடி வீடுகளின் விலைகள் மூன்றாம் காலாண்டோடு ஒப்பிடும்போது, ​​2019ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 0.4% உயர்ந்துள்ளன. இது கடந்த ஆண்டில், காலாண்டு அடிப்படையில் ஏற்பட்ட பெரிய உயர்வு என வீவக வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

முன்னோட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு முழுவதும் மறுவிற்பனை அடுக்குமாடி வீட்டு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நேற்று வீவக வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வரவிருக்கும் விற்பனை அறிமுகங்களைப் பொறுத்தவரை, வீவக இந்த ஆண்டு 16,000 முதல் 17,000 தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும். 2020ன் முதல் அறிமுகமாக பிப்ரவரியில் செம்பவாங், தோ பா யோவில் 3,000 வீடுகளையும், மே மாதத்தில் சுவா சூ காங், பாசிர் ரிஸ், தெம்பனிஸ், தெங்கா ஆகிய வட்டாரங்களில் 3,700 தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளையும் வெளியிடும்.

மேலதிக தகவல்களை வீவக இணையத் தளத்தில் காணலாம்.

இந்த ஆண்டு 0 முதல் 2 விழுக்காடு வரையில் விலைகள் உயரும் என சொத்து சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.

அதேவேளையில், முன்னோட்ட மதிப்பீடுகளின்படி, 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டு விலைகளும் முந்தைய காலாண்டைவிட 0.3% அதிகரித்துள்ளன. இது கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிட 1.3% அதிகம்.

ஆண்டுக்காண்டு அடிப்படையில், 2018ன் 7.9 விழுக்காடு உயர்வுடன் ஒப்பிடும்போது, 2019ன் குறியீடு 2.5 விழுக்காடு உயர்ந்துள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட முன்னோட்ட அறிக்கை தெரிவித்தது.

நான்காம் காலாண்டில் விலை உயர்வு பெரும்பாலும் தனியார் தரை வீடுகளின் விலைகளால் உந்தப்பட்டது. இது முந்தைய காலாண்டில் 1 விழுக்காடு அதிகரித்தது. காலாண்டுக்கு காலாண்டு ஒப்பிட சென்ற காலாண்டில் 4 விழுக்காடு உயர்ந்தது. முந்தைய காலாண்டில் 1.3% உயர்ந்த தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை நான்காம் காலாண்டில் 0.7% சுருங்கியது.

முத்திரை வரிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தங்களில் கொடுக்கப்பட்ட பரிவர்த்தனை விலைகள், டிசம்பர் நடுப்பகுதி வரை மேம்பாட்டாளர்களால் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முன்னோட்ட ஆணையத்தின் மதிப்பீடுகள் கணிக்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான புள்ளிவிவரங்கள், ஜனவரி 23 அன்று ஆணையம் தனது சொத்து சந்தை புள்ளிவிவரங்களை வெளியிடும்போது புதுப்பிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!