மலேசிய வாகன நுழைவு அனுமதி மீண்டும் ஒத்திவைப்பு

மலேசியா, தனது வாகன நுழைவு அனுமதி (விஇபி) முறை அமலாக்கத்தை மீண்டும் ஒத்திவைத்துள்ளதாக நேற்று தெரிவித்தது.

தங்கள் வாகனங்களில் ‘ஆர்எஃப்ஐடி’ (RFID)) எனப்படும் ரேடியோ அலைவரிசை அடையாளப் பட்டையை இன்னும் அதிகமான சிங்கப்பூரில் பதிவு செய்த வாகனங்கள் பொருத்திக்கொள்ளாமல் இருப்பதே அதற்குக் காரணம் என்று மலேசியாவின் சாலைப் போக்குவரத்துப் பிரிவு கூறியது.

இந்த வாகன நுழைவு அனுமதி முறைக்கு 230,000க்கு மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்துகொண்டி ருந்தாலும் அதில் கால்வாசி வாகனங்கள்தான் அதாவது 60,000 வாகனங்கள்தான் ‘ஆர்எஃப்ஐடி’ பட்டையைப் பொருத்திக்கொண் டுள்ளன என்றும் அப்பிரிவு சொன்னது.

“எஞ்சியிருக்கும் வாகனங்கள் அனைத்திலும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் ‘ஆர்எஃப்ஐடி’ பட்டையைப் பொருத்த இலக்கு கொண்டுள்ளோம்,” என்று மலேசியாவின் சாலைப் போக்குவரத்துப் பிரிவின் தலைமை இயக்குநர் ஷஹாருடின் காலிட் கூறியதாக மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.

வாகன நுழைவு அனுமதி முறை ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தையும் சுல்தான் அபுபக்கர் வளாகத்தையும் பயன்படுத்தும் அனைத்து வெளிநாட்டு வாகனங் களுக்கும் பொருந்தும் என்று மலேசியாவின் சாலைப் போக்குவரத்துப் பிரிவின் அறிக்கை கூறுகிறது.

2007ஆம் ஆண்டில், தனது நாட்டுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் வாகன நுழைவு அனுமதி இருக்க வேண்டும் என்று மலேசியா அறிவித்தது.

அதிகரித்து வரும் கார் திருட்டைச் சமாளிக்கவும் அபராதங்கள் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அது விளக்கியது.

விஇபி முறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடப்புக்கு வரும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

ஆனால், இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் விடுத்த அடுத்த அறிக்கையில், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் உச்ச நேரத்தில் இந்த முறை நடைமுறைப்படுத்தப் படாது என்றும் தெரிவித்தது.

‘ஆர்எஃப்ஐடி’ பட்டையைப் பொருத்தும் காலத்தை உறுதி செய்ய போதிய இடங்கள் இல்லை என்றும் ஒருவேளை பட்டையைப் பொருத்தும் காலம் உறுதி செய்யப்பட்டு, பட்டையைப் பொருத்தும் நிலையத்துக்குச் சென்றாலும் அங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் அதன் தொடர்பில் மலேசிய அதிகாரிகளிடமிருந்து சிறிய அளவிலேயே உதவி கிட்டுகிறது என்றும் சிங்கப்பூர் வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பட்டையைப் பொருத்துவதற்கு தற்போது கெலாங் பாத்தாவில் உள்ள தெற்கு நோக்கிச் செல்லும் விரைவுச் சாலையின் ஓய்வுத்தளம், அங்சானா திறந்தவெளி கார் நிறுத்துமிடம், பாண்டான் ஓய்வுத்தளம், லிமா கெடாய் சாலை வரி வளாகம் ஆகிய நான்கு நிலையங்கள் உள்ளன.

இவைத் தவிர சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் மேலும் ஒரு நிலையம் திறக்கப்படும் என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சு கூறியது.

அனைத்து வாகனங்களிலும் ஆர்எஃப்ஐடி பட்டையைப் பொருத்துவதற்கு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கடந்த அக்டோபரில் தெரிவித்தார்.

ஆர்எஃப்ஐடி பட்டை பொருத்தப்படுவதன் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் வாகன உரிமையாளர்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதை அறியும்போது தனது இலாகா உற்சாகம் அடைகிறது என்றும் திரு சஹாருடின் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!