சீனப் புத்தாண்டையொட்டி புதிய அஞ்சல் தலைகள் வெளியீடு

1 mins read
c9392b0a-4eda-4ca9-bd14-808dfe7cead9
சீன நாள் காட்டியின்படி வரும் சீனப் புத்தாண்டு எலி ஆண்டாக அனுசரிக்கப்படுவதால், எலியின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. படம்: எஸ்டி -

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிங்போஸ்ட் நிறுவனம் புதிய அஞ்சல் தலைகளை வெளி யிட்டுள்ளது. சீன நாள் காட்டியின்படி வரும் சீனப் புத்தாண்டு எலி ஆண் டாக அனுசரிக்கப் படுவதால், எலியின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் சீனப் புத்தாண்டு காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்களுக்கு அனுப்பப்படும் சீனப் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளுக்கான அஞ்சல் கட்டணங் களையும் சிங்போஸ்ட் இன்று முதல் இம்மாதம் 25ஆம் தேதி வரை குறைத்துள்ளது.

உதாரணத்துக்கு, 20 கிராமுக்கு உட்பட்ட எடையுள்ள அட்டைகளுக்கு 30 காசும் 40 கிராமுக்கு உட்பட்ட அட்டை களுக்கு 37 காசும் கட்டணம் விதிக்கப்படும். இவற்றுக்கு முன்பு 60 காசு விதிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்தப் புதிய அஞ்சல் தலைகளை அடுத்த புதன்கிழமை முதல் வாங்கிக் கொள்ளலாம்.