டெக் கீ வட்டாரத்தைச் சேர்ந்த 1,100 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளுக்காக நேற்று சிறப்பிக்கப்பட்டனர்.
டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு கல்வி உபகாரச் சம்பளம் 351 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கல்வி அமைச்சின் எடுசேவ் பரிசுகளை 760 பேர் பெற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் பிரதமரும் அங் மோ கியோ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
குடும்ப வருவாய், பள்ளி முதல்வர்கள் செய்யும் பரிந்துரை, கல்வித் தேர்ச்சிகள், நல்ல நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு இந்த படிப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.
கல்வி உதவி பெற்றவர்களை பிரதமர் லீ பாராட்டினார். குடும்பத்திற்கு அதிகம் செலவாகும் என்ற அச்சம் காரணமாக யாரும் கல்வியைப் பாதியில் விட்டுவிடும் நிலை கூடாது என்று பிரதமர் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது வலியுறுத்தினார்.