சுவா சூ காங் பல அடுக்குமாடி கார் பேட்டை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் நேற்று திடீரென்று தீப்பிடித்தது.
அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு கார்களும் கருகிவிட்டன. விடிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்த இந்தத் தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சுவா சூ காங் ஸ்திரீட் 52ல் உள்ள புளோக் 541 ஏ-யின் மூன்றாவது மாடியில் அந்த கார் பேட்டை அமைந்துள்ளது.
தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.