மூத்த அமைச்சர் தர்மன் புதுடெல்லி, மும்பை பயணம்

1 mins read
e4e63add-dfd2-463a-b73b-6175c3f08a63
மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் இன்றுமுதல் புதன்கிழமை வரை இந்தியாவின் புதுடெல்லி மற்றும் மும்பை நகர்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது. கோப்புப்படம்: எஸ்டி -

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் இன்றுமுதல் புதன்கிழமை வரை இந்தியாவின் புதுடெல்லி மற்றும் மும்பை நகர்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.

புதுடெல்லியில் இந்தியப் பிரதமரையும் இதர அரசாங்கத் தலைவர்களையும் அவர் சந்திப்பார். மும்பையில் செவ்வாய்க்கிழமை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் விரிவுரை ஆற்றும் திரு தர்மன், மகாராஷ்டிரா முதல்வரையும் தொழில்துறைத் தலைவர்களையும் சந்திப்பார். திரு தர்மனுடன் அதிகாரிகளும் இந்தியா செல்கிறார்கள்.