சிங்கப்பூரில் இந்த வார தொடக்கத்தில் போதைப்பொருள் கடத்திகள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு சிங்கப்பூர் ஆடவர்களிடம் இருந்து சுமார் $1.1 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் 39 வயது ஆடவர் ஒருவரும் லோரோங் 16 கேலாங்கில் 23 வயது ஆடவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைதான இருவரும் சிங்கப்பூரர்கள்.
பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் கைதுசெய்யப்பட்ட ஆடவரைப் போலிஸ் பின்தொடர்ந்ததில் உட்லண்ட்ஸ் டிரைவ் 50க்கு அருகே 2,009 எக்ஸ்டசி, 4,000 எர்மின்-5 போதை மாத்திரைகள், ஹெராயின் 60 கிராம், ஐஸ் 8,6 கிலோ கிராம் ஆகிய பொருட்கள் அவரது காரின் பின்பகுதியில் இருந்து கைப்பற்றது. செங்காங்கில் அவர் குடியிருக்கும் காம்பஸ்வேல் லேனுக்கு அருகேயுள்ள வீட்டில் இருந்து $16,250 கைப்பற்றியதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் போலிஸ் தெரிவித்துள்ளது.