கடந்த ஆண்டு எழுதப்பட்ட ஜிசிஇ சாதாரண நிலை தேர்வுக்கான முடிவுகள் அடுத்த திங்கட்கிழமை ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து பிற்பகல் 2.00 மணி முதல் முடிவுகளைப் பெறலாம் என்றும் கல்வியமைச்சு கூறியது.
தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் அதே நாளில் அஞ்சல் வழியாக அனுப்பப்படும். பிற்பகல் 2.00 மணியிலிருந்து அவர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி தங்களது முடிவுகளைக் காணலாம்.
தொடக்கக்கல்லூரிகள், மில்லேனியா கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழிற்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றுக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் தங்களது சாதாரண நிலை தேர்வு முடிவுகளைக் கொண்டு ‘ஜேஏஇ’ மாணவர் சேர்க்கை வழியாக விண்ணப்பிக்கலாம். ‘ஜேஏஇ’க்கான பதிவு திங்கட்கிழமை ஜனவரி 13ஆம் தேதி பிற்பகல் மூன்று மணி முதல் வெள்ளிக்கிழமை, ஜனவரி 17ஆம் தேதி பிற்பகல் நான்கு மணி வரை திறந்திருக்கும்.