ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள கெண்டன்மண்ட் சாலையில் நேற்று காலை மின்சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட விபத்து ஒன்றில் 69 வயது மாது ஒருவர் உயிரிழந்தார்.
மரணம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் காரை ஓட்டிய 25 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிவப்பு நிற சொகுசு காரான ‘மெசராட்டி’யை அவர் ஓட்டினார்.
மின்சார வசதியுடன் கூடிய சைக்கிள் ஒன்றை அந்த மாது ஓட்டிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.
கெப்பல் சாலையை நோக்கிச் செல்லும் கெண்டன்மண்ட் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அதிகாலை 5.25 மணிக்குத் தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.