சமூக ஊடகத்தில் ஏமாறுவோர் ஒன்பது மடங்கு அதிகரிப்பு

சமூக ஊடகம் வழி ஆள் மாறாட்டம் செய்து மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இத்தகைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மோசடியால் பாதிக்கப்பட்ட பத்து பேரில் அறுவர் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் ஏமாற்றப்பட்டோரின் எண்ணிக்கை 71லிருந்து 672க்கு மளமளவென உயர்ந்தது.

அத்துடன், அதே 11 மாதங்களில் ஏமாற்றப்பட்ட தொகை கிட்டத்தட்ட 43 மடங்கு அதிகரித்து, குறைந்தது $168,000லிருந்து $7.2 மில்லியனுக்கு உயர்ந்தது.

இதில் பெரும்பாலான சமயங்களில் ஏமாற்றுப் பேர்வழிகள், பொய்யான சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் எனக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்.

ஏமாறுவோரில் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும் திரு சண்முகம் தமது எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்திருந்தார்.

சீனாவின் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

2017ம் ஆண்டில் 188 சம்பவங்களாக இருந்த நிலவரம் கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 401க்கு உயர்ந்தது.

ஏமாற்றப்பட்ட தொகையும் $12.8 மில்லியனிலிருந்து $18.8 மில்லியனுக்கு உயர்ந்தது.

கடந்த ஆண்டில் இளைய வயதினரே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களின் வயது 30க்கு உட்பட்டிருந்தது.

தொழில்நுட்ப ஆதரவு தொடர்பான மோசடி சம்பவங்களும் 2017ஆம் ஆண்டில் 53 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டின் 11 மாதங்களில் 224க்கு அதிகரித்தது.

ஆனால், அச்சம்பவங்களின் மூலம் ஏமாற்றப்பட்ட தொகை 333 மடங்கு அதிகரித்து அதிர்ச்சி அளித்தது.

2017ல் $36,000 ஆக இருந்த தொகை கடந்த ஆண்டில் $12 மில்லியனுக்கு உயர்ந்தது. இதில் முதியவர்களும் இளம் வயதினரும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தொழில்நுட்ப ஆதரவு மோசடிக் குற்றங்களில் ஏமாற்றுப் பேர்வழிகள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அல்லது சட்ட அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் என்று பொய்யுரைத்து, நச்சுக்கிருகி மென்பொருளை அவர்களின் கணினியில் பதிவேற்றம் செய்யத் தூண்டுவார்கள்.

“குற்றவாளிகள் மற்றவர்களை ஏமாற்றப் புதுப்புது வழிகளை கையாளும் வேளையில் பொதுமக்களும் அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். நம்பகத்தன்மையுடைய தளங்களில் மட்டும் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

“இத்தகைய குற்றங்களைத் தடுக்க போலிஸ் வளங்கள் மட்டும் இருந்தால் போதாது. பொதுமக்களின் பங்கும் இதில் முக்கியம்,” என்றார் திரு சண்முகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!