அந்த ஆண்டின் நவம்பர் மாதத்துக்குள் பள்ளிக் கட்ட ணத்தை செலுத்தாத மாணவர்களின் பிஎஸ்எல்இ தேர்வு முடிவுத்தாட்களைக் கொடுக்காமல் இருக்கும் முறை பற்றிய மறுஆய்வு இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இதர பள்ளிக் கட்டணங்களை அனைத்து பெற்றோர்களும் செலுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்தும் தமது அமைச்சின் தற்போதைய நடைமுறை முழுப் பலனைத் தராமல் இருக்கலாம்,” என்பதை திரு ஓங் ஒப்புக் கொண்டார்.
“ஒவ்வோர் ஆண்டும் தொடக்கநிலை ஆறு மாணவர் களில் இரண்டு விழுக்காட்டினர் இன்னும் பள்ளிக் கட்ட ணம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் கல்வி அமைச்சின் நிதி உதவிக்கும் விண்ணப்பிப்ப தில்லை. கடந்த ஆண்டில் இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை 645,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
“பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் தவிர்த்த இதர கட்டணத்தையாவது (Miscellaneous fee) செலுத்த முற்பட வேண்டும். அது தொடக்கப் பள்ளிகளுக்கு மாதம் $6.50. எஞ்சியுள்ள $6.50 கட்டணத்தை எடுசேவ் நிதி மூலம் அமைச்சு வசூலிக்கும்.
“பெற்றோர்கள், குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுகின்றனர் என்றும் அதில் அவர்களின் பங்கு இன்றியமையாதது என்பதைப் பிரதி பலிக்கும் வகையில்தான் இந்த சிறிய கட்டணம் வசூலிக் கப்படுகிறது,” என்றும் அமைச்சர் கூறினார்.
“பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கு அவர்களின் பிஎஸ்எல்இ தேர்வு முடிவுத்தாட்களைக் கொடுக்காமல் இருக்கும் முறை ஆகக் கடைசியாக எடுக் கப்படும் நடவடிக்கைதான். இருப்பினும் தொடர்ந்து நிதி உதவி தேவைப்படும் பெற்றோர்களுக்கு அமைச்சின் நிதி உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அமைச்சின் அதி காரிகள் தொடர்ந்து ஊக்கப்படுத்துவார்கள்,” என்றும் திரு ஓங் தெளிவுபடுத்தினார். பெற்றோர்கள் கட்டணம் செலுத்தாததற்குப் பிள்ளைகளைத் தண்டிப்பது தவறு என்பதை கல்வி அமைச்சு உணர்ந்துள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் ஓங் கூறினார்.