உற்பத்திக்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்னுரிமை

உற்பத்திக்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்னுரிமை

1 mins read
491a52a4-74ed-4ae9-9717-58bbac45cbb5
இவ்வாண்டின் வர்த்தக சூழல் நிலையாக இல்லாததால் உற்பத்தியை பெருக்குவதில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. யுனைட்டெட் ஓவர்சிஸ் வங்கி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி -

இவ்வாண்டின் வர்த்தக சூழல் நிலையாக இல்லாததால் உற்பத்தியை பெருக்குவதில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. யுனைட்டெட் ஓவர்சிஸ் வங்கி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 615 நிறுவனங்களில் 51 விழுக்காடு நிறுவனங்கள் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகளை அம லாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளன.

செலவுகளைக் குறைப்பது, (43%) புதிய வருமானத்துக்கான வாய்ப்புகளைத் தேடுவது (42%) ஆகியவற்றுக்கும் நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன.

இந்த நிலையில் தொழில்நுட்பங்களில் முதலீடுகளை அதிகரிப்பது உற்பத்தியை பெருக்கும் வழிகளில் ஒன்று என்று யூஓபியின் நிர்வாக இயக்குநரும் சிங்கப்பூர் வர்த்தக வங்கிச் சேவையின் தலைவருமான மெர்வின் கோ கூறியுள்ளார்.