சீனப் புத்தாண்டையொட்டி புதிய நாணய நோட்டுகள்

சீனப் புத்தாண்டையொட்டி புதிய நாணய நோட்டுகள்

1 mins read
400ce803-029a-4cab-bbf2-21c4d8b130c3
-

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய நாணய நோட்டுகளை வழங்குகின்றன.

டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகள் இன்று முதல் புதிய நோட்டுகளை வழங்குகின்றன.

தீவு முழுவதும் 20 சமூக மன்றங்களில் உள்ள 40 பிஓஎஸ்பி 'பாப்-அப்' ஏடிஎம்களில் வாடிகையாளர்கள் புதிய நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இன்று தொடங்கி சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாளான இம்மாதம் 24ஆம் தேதி வரை அவர்கள் நோட்டுகளைப் பெறலாம்.

பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கியின் இணைய முன்பதிவு முறை மூலம் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

'பாப்-அப்' ஏடிஎம்கள் அல்லது வங்கிக் கிளைகளில் $2, $10, $50 ஆகிய நோட்டுகளைப் பெறலாம்.

ஓசிபிசி, யுஓபி வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இன்று முதல் புதிய நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.