'சிஓஇ' என்றழைக்கப்படும் வாகன உரிமைச் சான்றிதழுக்கான கட்டணங்கள் ஏலக்குத்தகையில் நேற்று ஏற்றம் கண்டன. 1,600சிசி அல்லது 130பிஎச்பிக்கும் குறைந்த சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $32,889ல் இருந்து $35,320 ஆகக் கூடியது.
1,600சிசி அல்லது 130பிஎச்பிக்கு மேலான சக்தியைக் கொண்ட கார்களுக்கான சிஓஇ கட்டணம் $36,000ல் இருந்து $37,109 ஆக அதிகரித்தது.
பொதுப் பிரிவு பயன்பாட்டுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $37,989ல் இருந்து 38,000 ஆனது.
வர்த்தக வாகனங்களுக்கும் பேருந்துகளுக்குமான கட்டணம் $23,200ல் இருந்து $24,402 ஆனது. மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் $3,685ல் இருந்து $3,989 ஆனது.

