ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பணிப்பெண் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் இந்தத் துன்புறுத்தல்கள் தொடங்கின.
76 வயது திருவாட்டி ஃபாத்திமா காசிமின் தலையில் ஏஸ் அட்டிக்கா தொடர்ந்து குத்தியதாகவும் கரங்களைக் கிள்ளியதாகவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இவை அவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்ட படுக்கையறையில் நிகழ்ந்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று ஏஸ் சொல்லிக்காமல் வீட்டைவிட்டுச் சென்றார்.
திருவாட்டி ஃபாத்திமாவின் தலையில் காயங்கள் இருந்ததைக் கண்டு அவரது பேரன் போலிசில் புகார் செய்தார்.

