எம்ஆர்டி ரயிலில் வாயுக் கசிவு

எம்ஆர்டி ரயிலில் வாயுக் கசிவு

1 mins read
d139f1de-7464-4e47-a208-8b08672b89e2
ரயிலில் புகை. படம்: OKA என்பவரின் ஃபேஸ்புக் -

எம்ஆர்டி ரயில் ஒன்று ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்தில் இருந்தபோது அதில் குளிர்சாதன வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் ரயிலின் உட்பகுதி புகைமூட்டமாகக் காணப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் நிகழ்ந்தது.

கசிந்த வாயு தீப்பிடித்துக்கொள்ளக்கூடியதல்ல. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயிலில் இருந்த எல்லாப் பயணிகளையும் ரயிலைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டோம். அடுத்த ரயிலை எடுக்கும்படி அவர்களிடம் கூறினோம். பாதிப்புக்குள்ளான ரயிலைச் சோதித்துப் பார்க்க அது மீட்டுக்கொள்ளப்பட்டது," என்று எஸ்ஆம்ஆர்டி நிறுவனத்தின் தலைமைத் தொடர்பு அதிகாரி திருவாட்டி மார்கரட் டியோ தெரிவித்தார். கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் காரணமாக யாரும் காயமடையவில்லை என்றும் தீச்சம்பவம் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

"வாயுக் கசிவால் ஏற்பட்ட நெடி சற்று அதிகமாகவே இருந்தது. ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்தை ரயில் அடைந்ததும் பயணிகள் அனைவரும் ரயிலைவிட்டு வெளியேறினோம். ரயிலில் பதற்றம் ஏற்படவில்லை. ஒருசிலர் மட்டும் பாதுகாப்பு குறித்து சிறிது கவலைப்பட்டனர். பயணிகள் சிலர் மட்டும் " என்று ரயிலில் பயணம் செய்த விற்பனை நிர்வாகியான 27 வயது திரு பென்னி ஓங் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity