பதினொரு வயதாகும் மீரா ஜெனிஃபர் ரவிச்சந்திரனை (படம்) காணவில்லை. அவர் கடைசியாக இம்மாதம் 8ஆம் தேதி காலை சுமார் 11.40 மணிக்கு புளோக் 426, பிடோக் நார்த் ரோட்டில் தென் பட்டார் என்று போலிஸ் தெரிவித்தது.
மீரா ஜெனிஃபரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் 1800-2550000 எனும் போலிஸ் நேரடித் தொலை பேசி எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப்பக்கத்தில் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும்.

