சீனப் புத்தாண்டு முதல் நாளில் 114 ஃபேர்பிரைஸ் கடைகள் திறந்திருக்கும்

சீனப் புத்தாண்டு முதல் நாளில் 114 ஃபேர்பிரைஸ் கடைகள் திறந்திருக்கும்

1 mins read
9609e00d-2522-488c-b27e-4e96b73afbbd
சீனப் புத்தாண்டு முதல் நாளான இம்மாதம் 25ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள 148 என்டியுசி ஃபேர்பிரைஸ் கடைகளில் 114 திறந்திருக்கும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. படம்: சாவ்பாவ் -

சீனப் புத்தாண்டு முதல் நாளான இம்மாதம் 25ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள 148 என்டியுசி ஃபேர்பிரைஸ் கடைகளில் 114 திறந்திருக்கும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டு முதல் நாளில் 110 கடைகள் திறந்திருந்தன.

இந்த 114 கடைகளில் 82, அன்று மாலை 5 மணி வரை திறந்திருக்கும். 24 கடைகள் 24 மணிநேரமும் எட்டு கடைகள் காலை 7 மணி முதல் கடை மூடப்படும் வரை செயல்படும் என்றும் கூறப்பட்டது.

சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாள் அதாவது இம்மாதம் 24ஆம் தேதி 123 கடைகள் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும். 24 மணி நேர ஃபேர்பிரைஸ் கடைகளும் சாங்கி விமான நிலைய முனையம் 3ன் கடையும் வழக்க மான நேரத்தில் செயல்படும்.

சீனப் புத்தாண்டின் 2ஆம் நாள் அதாவது இம்மாதம் 26ஆம் தேதி மெக்பர்சன் கடையைத் தவிர அனைத்து ஃபேர்பிரைஸ் கடைகளும் வழக்கமான நேரங்களில் செயல்படும். மெக்பர்சன் கடை மூன்றாம் நாள் அதாவது இம்மாதம் 27ஆம் தேதி திறந்திருக்கும்.

சீனப் புத்தாண்டு தொடர்பான உணவுப் பொருட்களை வாங்க ஏதுவாக 50க்கும் மேற்பட்ட ஃபேர்பிரைஸ் கடைகள் இம்மாதம் 15ஆம் தேதி முதல் கூடுதல் நேரம் திறந்திருக் கும். மேல் விவரங்களுக்கு என்டியுசி ஃபேர்பிரைஸ் இணையத்தளத்தைப் பார்க்கலாம்.