சமூகத்தின் இன்றியமையாத பொது இடமாக நூலகங்கள்

சமூகத்தின் இன்றியமையாத பொது இடமாக நூலகங்கள்

1 mins read
5ec02f9d-3057-488b-8a3a-6c169ceff9d4
ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் தொண்டூழியரான மென்பொருள் பொறியாளர் ரித்துலா ஜானுடன் உரையாடுகிறார் அமைச்சர் ஈஸ்வரன். நூலகத்திற்கு அடிக்கடி வரும் சோ லிங்கும் அமர்ந்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூகத்தினர் ஒன்றுகூடும் இன்றி மையாத பொது இடமாக நூல கங்கள் மாறியுள்ளன என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார்.

முதியோர், சிறப்புத் தேவையு டையோர் உட்பட பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடும் இடமாக நூலகங்கள் உள்ளன. இது, சமூகத்திற்கும் அரசாங்கத்துக்கும் இைடயே உள்ள பிணைப்பையும் காட்டுகிறது என்றார் அவர்.

ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விவோசிட்டி மாலில் அமைந்துள்ள ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்துக்கு நேற்று திரு ஈஸ்வரன் வருகையளித்தார்.

இந்த நூலகத்தை உடற்பிடிப்பு நிலையத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், அந்த அளவுக்கு மனதுக்கு இதமான சூழ்நிலையை கொண்டு உள்ளது என்றார்.

கடந்த ஓராண்டு காலத்தில் ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்துக்கு 1.8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

சென்ற ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இரவல் புத்தகங்களை பெறுவோர் எண்ணிக்கை 83% அதிகரித் துள்ளது.

நூலகத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் 180% அதிகரித் தது. இதனை சுட்டிக்காட்டிய திரு ஈஸ்வரன், உலக அளவில் நூலகங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில் சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்குடன் திகழ்கிறது என்றார். "வெளிநாடுகளில் பல நூலகங்கள் மூடப்பட்டு வருகின்றன அல்லது சிறியதாகி வருகின்றன. ஆனால் சிங்கப்பூர் அப்படியல்ல. இதற்கு முக்கிய காரணம், நூலகங்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான பிணைப்பு.

"இது, துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தொடங்கி வைத்த 'எஸ்ஜி டுகதர்' இயக்கத்துடன் ஒத்துப் போகிறது," என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.