லக்கி பிளாசா விபத்தில் சிக்கி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரு பணிப்பெண்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று பணிப்பெண்களுக்கான நிலையம் நேற்று தெரிவித்தது.
இருவரும் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அது கூறியது.
டிசம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த மோசமான விபத்தில் இவர்கள் இருவரும் காயம் அடைந்தனர்.
கறுப்பு நிற ஹோண்டா ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் இரண்டு பணிப்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் காயம் அடைந்த இதர இரண்டு ெபண்கள் டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர்.
இந்த விபத்தில் தொடர்புடைய 64 வயது ஆண் ஓட்டுநரை போலி சார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

