சன்னல் வழியாக 4வது மாடியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு பெண்

சன்னல் வழியாக 4வது மாடியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு பெண்

1 mins read
93341fb4-7135-4855-97d6-dbe1e37eeed9
வாம்போ டிரைவில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் வியட்னாமிய நாட்டைச் சேர்ந்த அந்த 27 வயது பெண் சுய நினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். படம்: ‌ஷின்மின் -

வாம்போ டிரைவில் நான்காவது மாடியிலிருந்து 27வயது பெண் ஒருவர் தவறி விழுந்தார்.

சனிக்கிழமை (ஜனவரி 11) மாலை 7.20 மணியளவில் சன்னல் வழியாக அவர் துணியை எடுத்தபோது தவறி கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.

வியட்னாமைச் சேர்ந்த அந்த 27 வயது பெண் சுய நினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக போலிசார் கூறினர்.

நான்காவது மாடியி இருந்து விழுந்தாலும் காயங்களுடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாம்போ டிரைவில் உள்ள வீட்டில் மூன்று நண்பர்களுடன் அவர் தங்கியிருந்ததாக ஷின்மின் நாளிதழ் குறிப்பிட்டது. நால்வரும் விடுமுறையில் சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

#தமிழ்முரசு