குளிப்பதை காணொளி எடுத்த யேல்-என்யுஎஸ் முன்னாள் மாணவர்

குளிப்பதை காணொளி எடுத்த யேல்-என்யுஎஸ் முன்னாள் மாணவர்

1 mins read
8544ee4d-124e-4ba1-be10-bdd9cee3e299
படம்: எஸ்டி, ஜேசன் குவா -

ஐந்து மாணவிகளுடன் பல்கலைக்கழக தங்கும் விடுதியைப் பகிர்ந்துகொண்ட யேல்-தேசிய பல்கலைக்கழக முன்னாள் மாணவர், அதில் நான்கு பெண்கள் குளிப்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நிர்வாண காணொளி எடுத்துள்ளார். பெண்களை மானபங்கப்படுத்திய எட்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தண்டனையின்போது இதுபோன்ற மேலும் 16 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைப் பேணுவதற்காக அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்பட வில்லை. 2017 ஆகஸ்ட் முதல் 2019 மார்ச் வரையில் அவர் இக்குற்றங்களைப் புரிந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட மறுநாளே, அந்த மாணவர் கல்லூரியிலிருந்து

உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக யேல்-என்யுஎஸ் கல்லூரி தெரிவித்தது. அவர் நேற்று $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். இம்மாதம் 31ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும்.