மயிரிழையில் தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி

மயிரிழையில் தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி

1 mins read
ccf85328-176a-4f8a-997b-3b9fa72d4623
திருவாட்டி இஸ்மாவதி அலி. படம் இஸ்மாவதி அலியின் ஃபேஸ்புக் -

லாரியின் திறந்த மேற்பகுதியிலிருந்து ஒரு பொருள் பறந்து வருவதைப் பார்த்த திருவாட்டி இஸ்மாவதி அலி, 40, முதலில் அது ஒரு கயிற்றின் துண்டுப்பகுதி என்றுதான் நினைத்தார். பிறகுதான் அது இரும்புக் குழாய் அல்லது கம்பியாக இருக்கலாம் என்பதை உணர்ந்த அவர், அது தன்னை நோக்கி வருவதைக் கவனித்தார்.

தமது 800சிசி கவாசாக்கி இசெட்800 மோட்டார்சைக்கிளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபடி, கம்பி தலையில் விழாதபடி, தலையைக் குனிந்து, கம்பி தலையில் படாமல் தப்பித்தார். ஆனால், அந்தக் கம்பி அவரது இடது தோளைத் தாக்கியது. அதனால் அவர் மோட்டார் சைக்கிளில் பின்னோக்கி சாய்ந்தார். தீவு விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது மோட்டார்சைக்கிள் சற்று தடுமாறியது. நல்லவேளையாக தன்னைத் திடப்படுத்திக்கொண்ட அவர், புக்கிட் பாத்தோக் நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

பின்னர் இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் அவரது காயத்துக்கு 12 தையல்கள் போடப்பட்டன.