பாசிர் பாஞ்சாங் மின்நிலைய வட்டாரத்தின் மறுசீரமைப்புத் திட்ட கண்காட்சி

பாசிர் பாஞ்சாங் மின்நிலையப் பகுதி புதுப் பொலிவு பெறவுள்ளது. கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலத்தில் ஹோட்டல், குடியிருப்புகள், ராட்சத நீர் சறுக்கு விளையாட்டுகள் அல்லது மிதக்கும் நீச்சல் குளம், ஆளில்லா வானூர்தி போட்டி மையம் போன்றவை அங்கு இடம்பெறக்கூடும்.

பொதுமக்களும் வடிவமைப்பாளர்களும் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையிலான கண்காட்சி தற்போது நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் மேக்ஸ்வெல் சாலை நிலையத்தில் நடைபெறுகிறது. பாசிர் பாஞ்சாங் மின் நிலையப் பகுதிக்கான புதிய யோசனைகளை சென்ற ஆண்டு ஆணையம் பொதுமக்களிடமிருந்து வரவேற்றது.

இந்த நீர் முகப்பு பகுதியை மேம்படுத்த அடுத்தாண்டு ஏலக் குத்தகை விடப்படலாம் என்று நேற்று கண்காட்சியைத் தொடங்கி வைத்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

இதன்தொடர்பில் தனியார் துறை சொத்து மேம்பாட்டாளர்களும் இதில் ஆர்வமுள்ள மற்றோரும் இந்தப் பகுதியை மேம்படுத்துவதன் சாத்தியக்கூறுகள் பற்றித் தெரிவிப்பதற்கான திட்டம் ஒன்றையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. ‘ரிக்குவெஸ்ட் ஃபார் இன்ஃபார்மேஷன்’ என்ற தகவல் அறிவதற்கான இந்தத் திட்டம், பொதுமக்கள் விண்ணப்பங்களிலிருந்த மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன என்று ஆணையத்தின் திட்ட இயக்குநர் திருவாட்டி கிளாரி சான் கூறினார்.

இதன்படி, அந்த வட்டாரத்தின் 15 ஹெக்டர் நிலத்தை அங்கு தற்போதுள்ள வடிவமைப்பு, மரபுடைமை ஆகியவற்றை ஓட்டி, அங்குள்ள திறந்தவெளி பகுதிகள் மேம்படுத்தப்படவேண்டும். அப்பகுதியும் அதைச் சார்ந்துள்ள நீர்முகப்புப் பகுதியும் பொதுமக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

பாசிர் பாஞ்சாங்கிலிருந்து மரினா ஈஸ்ட் வரை அமையவுள்ள தென் நீர்முகப்பு பெருந்திட்டத்தின் அங்கமாக இது அமையும்.

செங்கல் கட்டடங்களால் ஆன இரு பிரதான கட்டடங்கள், வட்ட வடிவிலான எண்ணெய்க் கிடங்குகள், துணை கட்டடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாசிர் பாஞ்சாங் மின்நிலைய வட்டாரம் கிட்டத்தட்ட 21 காற்பந்து திடல்கள் அளவிலானது. தென் நீர்முகப்பு பெருந்திட்டத்தில் முதலில் மேம்பாடு காணும் பகுதிகளில் ஒன்றாக இது இடம்பெறும்.

கண்காட்சியை நேற்றுத் தொடங்கி வைத்துப் பேசிய நிதிக்கான இரண்டாவது அமைச்சருமான வோங், திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்றார்.

பலரையும் ஈடுபடுத்தும் முழுமையான திட்டம் இது. இதில் நேரம் செலவழித்து கவனம் செலுத்துவது பயன்தரும் என்ற திரு வோங், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதிக சிங்கப்பூரர்களை ஈடுபடுத்தும் ‘சிங்கப்பூர் டுகெதர்’ இயக்கத்தின் ஒரு பகுதி இது என்றார்.

“சிங்கப்பூரின் மறுசீரமைப்பு என்பது நாட்டின் எல்லா பழைய கட்டடங்களையும் இடிப்பது அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை நாம் பாதுகாக்க முடியும். பழைய மின்நிலையத்துக்கு புதுப்பொலிவூட்ட முடியும்,” என்று அமைச்சர் வோங் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்தம் 10 திட்டங்கள் $3,000 வரையிலான ரொக்கப் பரிசை வென்றன. கட்டட வடிவமைப்பு, திட்ட வரைவு, மரபுடைமை நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. வெற்றி பெற்றவர்களில் சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்பு பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் குழுவும் அடங்கும்.

சுத்தமான, அதிக திறன் வாய்ந்த மின்நிலையங்கள் அமைக்கப்பட்டதால் 1953ல் கட்டப்பட்ட பாசிர் பாஞ்சாங் மின்நிலையங்கள் ஏ, பி இரண்டும் முறையே 1980களிலும் 1990களிலும் மூடப்பட்டன. மீண்டும் இக்கட்டடங்கள் 2018ல் கலை நிகழ்ச்சிகள், சந்தைள் போன்ற நிகழ்வுகளுக்காக பயன்பாட்டுக்கு வந்தன. சிங்கப்பூர் நில ஆணையத்தினால் நிர்வகிக்கப்படும் ஏறக்குறைய 5,000 பாதுகாக்கப்பட்ட மரபுடைமைக் கட்டடங்களில் இவை அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!