சுடச் சுடச் செய்திகள்

ஆய்வு: மூத்த தலைமுறையினரின் செலவினம் அதிகரிக்கக்கூடும்

உலகம் முழுவதும் 45 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் செலவினம் அதிகரிக்க இருப்பதாக சிட்டி வங்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட மேம்பட்ட பொருளியலைக் கொண்ட நாடுகளில் இந்த வயதுப் பிரிவினரே 2030ஆம் ஆண்டுக்குள் அதிகம் செலவு செய்வர் என்று சிட்டி வங்கி எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், 65 வயதுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் செலவு செய்யும் விகிதம் மற்ற வயதினரைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பணம், சொத்து வைத்திருக்கும் மூத்த தலைமுறையினரிடம் அதிக செல்வம் இருப்பதால் அவர்கள் செலவு செய்யும் விகிதம் அதிகரிக்கும் என்பதை சிட்டி வங்கி சுட்டியது.