கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க முன்பதிவு

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் அடுத்த ஆண்டு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ‘கே1’ வகுப்புகளுக்காக மொத்தம் 36 பாலர் பள்ளிகளில் பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பதிவு செய்துகொள்ளலாம். கடந்த ஆண்டு இருந்த 29 பாலர் பள்ளிகளைவிட இது அதிகம்.

2016ஆம் ஜனவரி 2 தேதிக்கும் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் பாலர் பள்ளி சேர்க்கைக்குப் பதிவுசெய்யலாம். அதுபற்றிய கூடுதல் விவரங்களைக் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். முன்பதிவு முடிவுகள் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.