ஆற்றலை வளப்படுத்திக்கொள்ளும் திட்டம் புதுப்பிக்கப்படவுள்ளது

நடுத்தர வயதில் வேலை மாறும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஆற்றலை வளப்படுத்திக்கொள்ளும் திட்டம் புதுப்பிக்கப்படுவதிலிருந்து பலனடைய முடியும். ‘சேல்ஸ்ஃபோர்ஸ் பிளாட்ஃபாம்’ நிறுவனத்தின் நிபுணத்துவ ஊழியர்கள் பங்கேற்கும் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம் 2023ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்படும்.

இத்திட்டத்தின் முன்னோட்ட நிகழ்வில் பங்கேற்ற 29 பேரின் பட்டமளிப்பு விழாவில் இது குறித்த விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, மென்பொருள் நிறுவனமான ‘சேல்ஸ்ஃபோர்ஸ்’, வர்த்தகச் சங்கமான ‘எஸ்ஜிடெக்ஸ்’ ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவம் மூலம் நடுத்தர வயதில் வேலை மாறுபவர்கள் உட்பட ஏறத்தாழ 150 பிஎம்இடிக்கள் பலனடைய முடியும்.