நீதிமன்றத்தை மீண்டும் அசுத்தம் செய்து அவமதித்த ஆடவர்

14 வயது சிறுமிகள் இருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கும் 49 வயது ஆடவர் நேற்று உயர் நீதிமன்றத்திலேயே மலம் கழித்தார்.

மலம் கழித்த பிறகு அசுத்தமாகிவிட்ட தமது ஆடைகளை மாற்ற அவர் மறுத்துவிட்டார். வழக்கு விசாரணைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என நீதிபதி எச்சரித்தும் குற்றவாளிக் கூண்டின் கண்ணாடி மீது இஷான் கயூபி மலத்தைப் பூசினார்.

பகுதி நேர உணவு விநியோக ஊழியரும் மோட்டார் சைக்கிள் குண்டர் கும்பல் உறுப்பினருமான இஷான் வழக்கு விசாரணையின்போது தொந்தரவு  விளைவித்திருப்பது இது முதல்முறையல்ல.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இஷாமின் வழக்கு விசாரணை தொடங்க இருந்தபோது அவர் தமது ஆடைகளைக் கழற்றி குற்றவாளிக் கூண்டில் இருந்தவாறு சிறுநீர் கழித்தார்.

அதையடுத்து அவரது மன

நலத்தைச் சோதிக்க அவர் மனநலக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இஷாமைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், வழக்கை எதிர்நோக்கும் தகுதி அவருக்கு இருப்பதாகக் கூறினர்.

இஷாம் வேண்டுமென்றே நீதிமன்றத்தில் மலம் கழித்தது போல தெரிவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவர் இதுபோன்ற தொந்தரவு விளைவிக்கும் செயல்களில் ஈடுபவதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜூரோங் வெஸ்ட்டில் இஷாம் தனியாக வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது.  வெவ்வேறு சமயங்களில் இரண்டு சிறுமிகளை அவர் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படுகிறது.

அந்த பெண்களை அவர் பாலியல் ரீதியாகத் தாக்கியபோது அதை அவர் தமது கைபேசியில் படமெடுத்ததாகக் கூறப்படுகிறது. 

அந்த இரு சிறுமிகளில் ஒருவரை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று இலாம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  

தமது வீட்டைச் சுத்தம் செய்தால் $150 கொடுப்பதாகக் கூறி அவர் அந்தச் சிறுமியைத் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பிறகு அவளுக்கு தலைக்கவசம், காதில் அணிந்துகொள்ளும் புளூடூத் சாதனம், $20 ஆகியவற்றை இஷாம் கொடுத்தார்.

மற்றொரு சிறுமியை அதே மாதம் 29ஆம் தேதி இஷாம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தமது வீட்டைப் பார்த்துக்கொண்டால் கைபேசி வாங்கித் தருவதாக இஷாம் அச்சிறுமியிடம் தெரிவித்த தாக அறியப்படுகிறது. தமது ஆசைக்கு இணங்காவிட்டால் தமது நண்பர்களைவிட்டு அவளைப் பாலியல் வன்கொடுமை செய்யச்சொல்லப்போவதாக இஷாம் சிறுமியை மிரட்டினார். நடந்ததைப் பற்றி வெளியே கூறினால் அவள் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதைக் காட்டும் காணொளிகள் வெளியிடப்படும் என்றும் இஷாம் மிரட்டினார்.

அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு இஷாம் அவளிடம் $20 கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதாக அறியப்படுகிறது.

வழக்கு விசாரணை தொடர்கிறது.