மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை: கடத்தப்பட்ட சிங்கப்பூரர் தகவல்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட சிங்கப்பூரர் அங்கு தமக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து உள்ளார். கடத்தப்பட்டதற்கு நான்கு நாள் கழித்து ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் தாய்லாந்திலிருந்து தொலைபேசி வழியாகப் பேசினார் மார்க் செங் ஜின் குவான் எனப்படும் அவர்.

சக சிங்கப்பூரரான கிம் லீ யாவோ வெய் என்பவருடன் இம்மாதம் 9ஆம் தேதி காலை பேங்காக்கில் இறங்கியதும் விமான நிலையத்திலிருந்து டாக்சியில் சென்றபோது ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் சாசோயெங்சாவ் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் தாம் கடத்தப்பட்டதாக மார்க் கூறினார்.

முகமூடி அணிந்த ஆடவர் கும்பல் தமது கண்களைக் கட்டி கார் ஒன்றில் கடத்திச் சென்றதாகக் கூறினார் அவர். தம்முடன் வந்த லீயைப் பற்றி ஒன்றும் தெரியாததால் அவரின் நிலை பற்றி கவலைப்பட்டதாகவும் பின்னர் போலிசார் தெரிவித்த பின்னர்தான் இந்தக் கடத்தலின் பின்னணியில் லீ இருந்தது பற்றி தமக்குத் தெரிந்ததாகவும் மார்க் சொன்னார்.

‘பிட்காய்ன்’ எனப்படும் மின்னிலக்க நாணயம் பற்றித் தெரிந்துகொள்வதற்காக லீயுடன் பழகியபோது கடந்த ஆண்டு நட்பில் நெருக்கம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

கடத்தப்பட்டதாக தாம் பேங்காக்கிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிராச்சின் புரி மாகாணத்தில் கபின் புரி என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்துவைக்கப்பட்டதாகவும் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் தமது கால்கள் ஒரு நாற்காலியோடு சேர்த்து கட்டப்பட்டு இருந்ததாகவும் கூறினார்.

“ஆரஞ்சு பழச்சாறு போல இருந்த ஒரு பானத்தை குடிக்கச் சொல்லி பலவந்தப்படுத்தினார்கள். அதன் பிறகு எனது உதடுகள் நடுங்கின. வெளியில் துப்பவும் முடியவில்லை,” என்று விவரித்தார் மார்க். நான்கு காட்டுப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று தம்மை கடத்தல் கும்பல் 12 மணி நேரம் சித்திரவதை செய்ததாக ‘வான்பாவ்’ சீன நாளிதழிடம் மார்க் கூறினார். தம்மை அடித்து உதைத்த கும்பல் மின்கம்பிகளால் தமது உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமை செய்ததாகவும் 500,000 டாலர் (S$674,000) பிணைப்பணமாக வேண்டும் எனவும் அதனை மின்னிலக்க நாணயமாகத் தர வேண்டும் எனவும் மிரட்டியதாகவும் அவர் கூறினார்.

“ஒரு காட்டுப்பகுதியில் என்னை மண்டியிட வைத்து கண்களைக் கட்டி இருந்தார்கள். பக்கத்தில் குழி பறிப்பதுபோல ஒரு சத்தம் கேட்டது. கேட்ட பணத்தைத் தராவிட்டால் அங்கேயே என்னை புதைக்கப்போவதாகக் கூறினார்கள். என் நெற்றியில் துப்பாக்கி முனையை வைத்து அழுத்தினார்கள்,” என்றார் மார்க்.

திடீரென்று பலத்தை வரவழைத்துக் கொண்டு, கையிலிருந்த கட்டை அவிழ்த்து, துப்பாக்கியைத் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி தப்பித்ததாகவும் எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்ததாகவும் அவர் கூறினார். இரவில் ஒளிந்திருந்த பின்னர் விடியற்காலையில் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தாம் போலிஸ் நிலையம் வர உதவியதாகச் சொன்னார்.

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட லீ, 31, மீது ஆயுள்தண்டனைக்கு இட்டுச் செல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சாசோயெங்சாவ் போலிஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது. தாய்லாந்தில் கடத்தப்பட்ட மார்க் மீது பணம் கையாடல் தொடர்பாக சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட அவர் வேலை தொடர்பாக மலேசியா, தாய்லாந்து செல்ல பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார். அந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று வியாழக்கிழமை அல்லது நாளை மார்க் சிங்கப்பூர் திரும்பக்கூடும் என கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!