போதைப்பொருள் தொடர்பாக ஐவர் கைது

நாடற்ற ஆடவர் ஒருவர் 845 கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். மரண தண்டனைக்கு இட்டுச் செல்லும் அளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 56 மடங்கு அதிகமான போதைப் பொருள் இது. இவருடன் சேர்த்து இதர நால்வரும் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது. அவர்களில் இருவர் மலேசியர்கள், ஒருவர் சிங்கப்பூரர், மற்றவர் வெளிநாட்டுப் பெண்மணி. 

வெளிநாட்டுக் குடியுரிமை யை இழந்தோர், தங்களது சொந்த நாட்டில் குடியுரிமையைப் பதிவு செய்யாதோருக்கு பிறந்தோர், சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன் இங்கிருந்தா லும் எங்கு பிறந்தார்கள் என்பதை நிரூபிக்கத் தவறியோர் நாட்டற்றவர் என கருதப்படு கின்றனர்.