சுடச் சுடச் செய்திகள்

சீனப் புத்தாண்டையொட்டி மீன், இறால், காய்கறி விலை அதிகரிக்கலாம்

இவ்வாண்டு சீனப் புத்தாண்டை மலிவான விலையில் கிடைக்கும் இறால், காற்கறிகளுடன் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும்.

இந்தோனீசியாவில் ஏராளமான இறால்கள் சிக்கியதால் அவற்றின் விலைகள் இருபது விழுக்காடு குறைந்துள்ளது.

நேற்று சொங் பாங் சந்தையில் நடுத்தர அளவுள்ள  ஒரு கிலோ இறால்களின் விலை பத்து முதல் 16 வெள்ளிக்கு விற்கப்பட்டன.

முன்னைய பண்டிகைக் காலங்களில் ஒரு கிலோ இறால்களின் விலை 40 வெள்ளி வரை விற்கப்பட்டது. 

இரண்டு வாரங்களுக்கு முன்பு இறால்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. ஆனால் தற்போது அதிக அளவு இறால்கள் கிைடத்துள்ளதால் இந்த வாரம் விலை குறைந்துள்ளது என்று சிங்கப்பூர் மீன் வியாபாரிகளின் சங்கத் தலைவர் லீ பூன் சியோவ் தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டுக்கு இறால்கள் மட்டுமல்லாமல் காய்கறிகளின் விலைகளும் குைறந்துள்ளன.

மலேசியாவில் விளைச்சல் அதிகரித்ததே இதற்கு காரணம்.

சிங்கப்பூர் பழங்கள், காய்கறிகள் இறக்குமதி, ஏற்றுமதியாளர் சங்கத்தின் உதவி தலைவர் ஜெர்ரி டான், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய பருவநிலை சாதகமாக உள்ளதால் தரமான காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளது என்றார்.

கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவில் மழையும் வெள்ளமும் இருந்ததால் காய்கறிகளின் விநியோகம் குறைந்தது. 

சில காய்கறிகளின் விலை 80 விழுக்காடு வரை அதிகரித்தது.

இதற்கிடையே  சீனப்புத்தாண்டுக்குப் பிரபலமான சீன ‘பாம்ஃபிரட்’, சிவப்பு ‘குருப்பர்’, ‘ரேபிட்’ மீன் போன்றவற்றின் விலை இவ்வாரம் இருபது விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய மீன்கள் சீனப்புத்தாண்டின்போது அதிகமாக விற்பனையாவது வழக்கம்.

சுபிட்சமான பெயர்களைக் கொண்டுள்ள இவை சுவையாகவும் இருப்பதால் அதிக அளவு விற்பனையாகின்றன.

“ஒன்றுகூடல் விருந்துக்காக   அதிகமானோர் மீன்களை வாங்க விருக்கின்றனர். இதனால் வார இறுதியில் மீன் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்,” என்று  திரு லீ சொன்னார். சென்ற வியாழக்கிழமை சீன ‘பாம்ஃபிரட்’ மீன்கள் கிலோ 75 வெள்ளிக்கு விற்கப்பட்டன.  சீனப்புத்தாண்டு நெருங்கு வதால் இந்த மீன்களின் விலை மேலும் அதிகரிக்கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon