4,000 பேருக்கு தலா 200 வெள்ளி அபராதம்

ஆர்ச்சர்ட் ரோட்டில் தடை உத்தரவையும் மீறி புகைபிடித்த 4,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் தலா 200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஆர்ச்சர்ட் பகுதியில் புகைபிடிப்பதற்கு எதிரான தடை அமலுக்கு வந்   தது.

அப்போது முதல் தற்போது வரை தடையை மீறி புகைப்பிடித்த 4,000க்கும் மேற்பட்டோர் தண்டிக்கப் பட்டுள்ளனர் என்று வாரியம் குறிப்பிட்டது.

அபராதம் விதிக்கப்பட்டவர்களில் 26 விழுக்காட்டினர் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள். எஞ்சியவர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள்.

கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பொது இடங்கள் புகையிலா வட்டாரமாக மாற்றப்பட்டன. 

இதையடுத்து புகைபிடிப்பதற்காகவே தனியிடங்கள் ஒதுக்கப்பட்டன. 

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் மூன்று மாத காலத்துக்கு தடையுத்தரவை பொதுமக்கள் அறிந்துகொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. 

அதன் பின்னரே அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட புகையில்லா வட்டாரங்களில் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு புகைபிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் வாரியம் கூறியது.