சாங்கி விமான நிலைய எம்ஆர்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்தத் தடத்தின் வழியாகச் செல்லும் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் தங்களுடைய பயணத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்ற திங்கட்கிழமை காலை பொறியாளர்கள் சோதனையில் ஈடுபட்டபோது விரிசல் கண்டு பிடிக்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் விரிசல் எவ்வளவு பெரியது என்பது பற்றிய விவரங்களை அது வெளியிடவில்லை.
இந்த நிலையில் விரிசலை சரி செய்வது சிக்கலான பணி என்று குறிப்பிட்ட எஸ்எம்ஆர்டி நிறு வனத்தின் தலைமை தொடர்பு அதிகாரியான மார்கரெட் டியோ, அடுத்த செவ்வாய்க்கிழமை பழுது பார்ப்புப் பணி முடிவடையும் என்றார்.
இதனால் பயணிகள் நிலைமையைப் புரிந்துகொண்டு பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.