முதலாளியை கத்தியால் தாக்கிய பணிப்பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது

முதலாளியை கத்தியால் தாக்கிய பணிப்பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது

1 mins read
2ad53dce-024b-4962-8d1b-6d0c971c0c44
விசாரணை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றின் உதவியுடன், அந்தப் பணிப்பெண் நேற்று சாங்கி விமான நிலைய முனையம் 1ல் கைதானார். -

பணிப்பெண் ஒருவர் முதலாளியை அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு தாக்கி கடுமையான காயம் விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான அந்தப் பெண்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று (ஜனவரி 17) காலை11.10 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். காமன்வெல்த் குளோசில் உள்ள தமது வீட்டில் பணிப்பெண் தம்மைக் கத்தியைக் கொண்டு தாக்கியதாக காயமடைந்த பெண் போலிசில் தெரிவித்தார்.

விசாரணை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றின் உதவியுடன், அந்தப் பணிப்பெண் நேற்று சாங்கி விமான நிலைய முனையம் 1ல் கைதானார்.

அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு தாக்கி கடுமையான காயம் விளைவிப்போருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, பிரம்படி, அபராதம் விதிக்கப்படலாம். பெண்களுக்கு பிரம்படி விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #பணிப்பெண்கைது #முதலாளியைதாக்கியபணிப்பெண்

குறிப்புச் சொற்கள்