கொள்கைகளை பரிந்துரைக்க இளையருக்கு புதிய திட்டம்

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் இணைந்து ஆறு மாதத் திட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இளைய தலைமுறையினர் தங்க ளது கவனத்தை ஈர்த்த விவகாரங்கள் குறித்த கொள்கை பரிந்துரைகளை இத்திட்டத்தின் வாயிலாக அளிக்கலாம். அத்துடன் அதற்கான அடிப்படை நடவடிக்கைகளையும் அவர்கள் தொடங்கலாம்.

தாங்கள் தேர்ந்தெடுத்த விவகாரங்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பும் இளைய சிங்கப்பூரர்களுக்காக ‘இளையர் செயல் சவால்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக நேற்று பிற்பகலில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ அறிவித்தார்.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் தேசிய இளையர் மன்றம் நடத்திய இளையர் ஈடுபாட்டு அரங்கில் சுமார் 260 இளையர்கள் பங்கேற்றனர். வரவு-செலவுத் திட்டத்திற்கு முந்திய இளையர் சந்திப்பாகவும் அந்நிகழ்வு அமைந்தது.

அந்த அரங்கில் உரை நிகழ்த்திய திருவாட்டி ஃபூ, “சிறப்பான சிங்கப்பூரைப் பெற வேண்டுமாயின் களத்தில் இறங்கிப் பணியாற்றத் தயாராக வேண்டும்,” என்றார்.

கொள்கை பரிந்துரைப்புகளுக்காகவும் அடித்தள நடவடிக்கைகளுக்காகவும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளைய மக்கள் குழுவாகப் பணியாற்றி வருகிறார்கள். தொழில்துறை, பல்வேறு சமூகங்கள் மற்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் பல்வேறு தலைவர்கள் அந்த இளையர்களை வழிநடத்துகிறார்கள்.

40க்கும் மேற்பட்ட குழுக்கள் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தும். சுற்றுச்சூழல், சமூகச் சச்சரவுகள், வேலைகளும் எதிர்காலப் பணிகளும் - என்பன அந்த அம்சங்கள்.

சிறந்த பரிந்துரைகளை வகுத்து வழங்குவதற்கு ஏதுவாக இத்திட்டம் போட்டி வடிவில் செயல்படும். குழுக்கள் பரிந்துரைக்கும் அம்சங்களை நடுவர் குழு பரிசீலிக்கும். ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் இளையர் செயல் சவால் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் 12 சிறந்த குழுக்களை இறுதிப் போட்டியாளர்களாக நடுவர் குழு தேர்ந்தெடுக்கும்.

அந்த மாநாட்டில் நான்காம் தலைமுறைத் தலைவர்கள், தொழில்துறை நிபுணர்கள், முக்கிய இளம் தலைவர்கள் ஆகியோருக்கு தங்களது யோசனைகளை குழுக்கள் வழங்கும். பின்னர் அந்த யோசனைகள் செயல்

வடிவம் பெற $50,000 வரையிலான மானியத்தை குழுக்கள் பெறும். இதர குழுக்களுக்கு $5,000 வரையிலான மானியம் கிடைக்கும்.

“வலுவான சமூகத்தை உருவாக்குவது என்பது அரசாங்கம் மட்டுமே தனித்துச் செயல்படும் ஓர் அம்சம் அல்ல. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்திடம் மட்டுமே தீர்வு உள்ளது என்பதாகாது,” என திருவாட்டி ஃபூ எடுத்துரைத்தார். ‘எஸ்ஜி டுகெதர்’ என்னும் இயக்கத்தின் ஒரு பகுதியாக அவரது உரை அமைந்தது. கொள்கைகளை வடிவமைப்பதில் குடிமக்களும் உதவிக்கரம் நீட்டும் பொருட்டு நான்காம் தலைமுறைத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் குறித்து கடந்த ஜூன் மாதம் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.

இளையர் செயல் சவால் திட்டத்தின் மூலம் வியப்படையும் வகையிலான யோசனைகளையும் தீர்வுகளையும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஃபூ நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!