அதிகாலை மூண்ட கைகலப்பு: மருத்துவமனையில் ஆடவர்

அதிகாலை மூண்ட கைகலப்பு: மருத்துவமனையில் ஆடவர்

1 mins read

போட் கீ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மூண்ட கைகலப்பில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 58 சௌத் பிரிட்ஜ் ரோட்டில் விடியற்காலை 5.20 மணிக்கு சம்பவம் நிகழ்ந்ததாக 'சேனல் நியூ ஏஷியா' இணையச் செய்தி தெரிவிக்கிறது. 40 வயது ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதை உறுதி செய்த போலிஸ், சம்பவம் தொடர்பில் விசாரணை நடப்பதாகக் கூறியது. மதுபானக்கூடம் ஒன்றின் அருகே மூண்ட கை கலப்பில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டு இருந்ததாக சம்பவத்தைக் கண்ட ஒருவர் கூறியதாக 'சேனல் நியூஸ் ஏஷியா' தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் அப்பகுதிக்குச் சென்றபோது சாலையில் படிந்திருந்த ரத்தக்கறை அகற்றப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.