மானபங்கம்: நன்யாங் பல்கலையில் ஆடவர் கைது

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஒருவ ரின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 26 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்ட தாக ‘டுடே’ இணையச் செய்தி கூறியது. சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் நன்யாங் டிரைவில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இருந்து அந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ‘டுடே’விடம் போலிஸ் தெரிவித்தது.
அந்த ஆடவர் பல்கலைக்கழக மாணவர் என்று நம்பப்படுவதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது. பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பெண்களிடமும் ஓர் ஆடவரிடமும் போலிசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததைத் தாங்கள் கண்டதாக ‘டுடே’ வாசகர் ஒருவர் தெரிவித்தார்.