குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குள் புகுந்த குரங்கு

புக்கிட் பாஞ்சாங்கின் செகார் ரோட்டில் உள்ள புளோக் 546Aன் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள இச்சிபான் மாண்டிசோரி குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பிற்பகல் 4 மணிவாக்கில் ஒரு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அப்போது அங்கு எதிர்பாராத விதமாக நீண்ட வாலுள்ள மக்காவ் எனப்படும் குரங்கு வகுப்பறையின் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தது.

அந்தக் குரங்கை அங்கிருந்து விரட்டியதாகக் குறிப்பிட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் திருவாட்டி அலிஸ் ஓவ், 48, சற்று நேரத்துக்குப் பிறகு அந்தக் குரங்கு வகுப்பறைக்குள் நுழைந்தது என்றார்.

“பிள்ளைகளின் பாதுகாப்பே முதன்மையாகத் தோன்றியதால் பிள்ளைகள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினோம்,” என்றார். ஆனால், குரங்கைப் பார்த்ததும் பிள்ளைகள் அனைவரும் குதூகலித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நிலையத்தின் தீச் சம்பவ வெளியேற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி 90க்கு மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.

அந்த குரங்கின் நடமாட்டத்தைக் கவனித்தபடி மற்றொரு ஆசிரியருடன் வகுப்பறைக்குள் இருந்த திருவாட்டி அலிஸ், பிறந்தாள் கொண்டாட்டத்தில் எஞ்சிய கேக் ஒன்றை சன்னலுக்கு வெளியில் எறிந்து குரங்கை வகுப்பறையிலிருந்து வெளியேற்றினார்.

இதற்கிடையே, திருவாட்டி அலிஸ் தொடர்புகொண்ட அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர்.

அன்று பிற்பகல் 2 மணியளவிலேயே வனவிலங்கு நிர்வாகக் குழு செகார் ரோடு பகுதிக்கு வந்துவிட்டதாக ஏக்கர்ஸ் எனப்படும் விலங்கு நல ஆய்வு மற்றும் கல்வி அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மாது ஒருவர் மக்காவ்வுக்கு வாழைப்பழங்கள், ஆப்பிள் பழங்கள் கொடுத்ததாகக் குறிப்பிட்டார். மக்காவ்வை குடியிருப்புப் பகுதியிலிருந்து அதிகாரிகள் வெளியேற்றியதாக அவர் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து மக்காவ், குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குள் வந்ததாகக் கூறப்பட்டது.

வனவிலங்குகளுக்கு யாரும் உணவளிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட திருவாட்டி அன்பரசி, உணவுக் கழிவுகளையும் குப்பைகளில் முறையாகப் போடுமாறு கேட்டுக்கொண்டார்.

குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குள் குரங்குகள் மீண்டும் வராமல் இருபப்தை உறுதி செய்ய, சன்னல்களில் தடுப்பு வலைகள் அமைக்க இருப்பதாக திருவாட்டி அலிஸ் கூறினார்.

#தமிழ்முரசு #குரங்கு #குழந்தைபராமரிப்புநிலையம் #மக்காவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!